மலாயாப் பல்கலைக்கழகம்

மலேசியத் தமிழர் சங்கம்

சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழியல் பன்னாட்டு மாநாடு 2021

அறிமுகம்

உலகிலேயே தனி மகத்துவம் கொண்ட இனம் நம்முடைய தமிழ் இனம். தமிழினத்தின் உயர்வான வாழ்விற்கு வித்தாக விளங்கிய தமிழ் மொழியின் சிறப்பை உலகத்தமிழர்கள் அறிய வேண்டும், உணர வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையோடு இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசியத் தமிழர் சங்கம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை
ஆகியவை இணைந்து, தமிழக்கு மற்றுமொரு மகுடக்கல்லாய் நிலைத்திருக்க வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்திற்காக இம்மாநாட்டினை நடத்துகின்றோம்.
‘வாழ்வியல் மேம்பாட்டிற்குத் தமிழின் கொடை’
மொழியின் தொன்மை, கலை கலாச்சார செம்மை, சமய மாட்சிமை, பண்பாட்டுப் பெருமை, அறிவியல் ஆளுமை, வர்த்தகத் தொழில்நுட்ப வளமை போன்ற பல்வேறு பொருண்மைகளில் படைக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் முறைப்படுத்தப்பட்டு இரு மொழிகளில் (தமிழ் ஆங்கிலம்) நூலாகப் பதிப்பிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழர்களும் இம்மாநாட்டில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று விழைகிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழரும் தமிழும் சிறப்பெய்திட நல்லதொரு நிகழ்வாக இம்மாநாடு அமைய வேண்டும்.
என்று தமிழன்னையை வணங்கி
உங்களுக்கு மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.
மேலும் விபரம் பெற்றிட இம்மாநாட்டுச்
செயலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநாட்டின் நோக்கம்

தமிழர்களின் மரபுவழி வாழ்வியல் விழுமியங்களைக் கண்டறிதல்.

சமகாலத் தமிழர்களின் வாழ்வியல் போக்கை அடையாளம் காணல்.

தமிழர்களின் மரபுவழி வாழ்வியல் விழுமியங்கள் சமகாலத் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு எவ்வாறு பங்களிக்கவியலும்/வழிகாட்டவியலும் என்பதை உணர்த்துதல்.

ஏற்பாட்டுக் குழுவினர்

தான்ஸ்ரீ டத்தோ கே. ஆர். சோமசுந்தரம்
மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன், மலேசிய மனிதவள அமைச்சர்

ஆலோசகர்கள்

பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன் முனியாண்டி

ஆலோசகர்கள்

பேராசிரியர் பெ. கோவிந்தசாமி

ஆலோசகர்கள்

முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம்

மாநாட்டுக்குழு தலைவர்

திரு. எம். ஜெ. கணேசன்

இணைத்தலைவர்கள்

முனைவர் கோ. பழனி

இணைத்தலைவர்கள்

முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி

துணைத்தலைவர்கள்

திரு. இராஜேந்தரன்

துணைத்தலைவர்கள்

திரு. பரமசிவம் மருதை

செயலாளர்

முனைவர் சில்லாளி

துணைச் செயலாளர்கள்

திரு. குமரன் தீபக்

துணைச் செயலாளர்கள்

திருமதி மு. செல்வி

பொருளாளர்

கட்டுரைக் குழு

முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி

தலைவர்

முனைவர் ஆ.ஏகாம்பரம்

முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா

முனைவர் மலர்விழி சின்னையா

முனைவர் மோகன தாஸ் இராமசாமி

முனைவர் வீரமோகன் வீரப்புத்திரன்

முனைவர் ரவீந்திரன் மாரையா

கணினி தொழில்நுட்பக் குழு

திரு. மு. சங்கர்

திரு. இளந்தமிழ் மருதை

திரு. குமரன் தீபக்

திரு. விஜய்

தகவல்/ பன்னாட்டு தொடர்பு

திரு. குணபதி ஆறுமுகம்

டத்தோ கோபி

திரு. சாமுவேல் ராஜ்

நிதி

திரு. எம். ஜெ. கணேசன்

திருமதி. மு. செல்வி

டத்தோ ஆ. சோதிநாதன்

டாக்டர் க. குமரகுருபரம்

வாழ்வியல் மேம்பாட்டிற்குத் தமிழின் கொடை- முதன்மை உரைகள்

1. தமிழில் தலைமைத்துவம்.
2. ஆரோக்கியத்திற்கு வித்திடும் தமிழ்மொழி.
3. உயர்நிலைச் சிந்தனைக்குத் தமிழ்மொழி.
4. செல்வச் செழிப்புக்கு வித்திடும் செம்மொழி.
5. தமிழோடு உயர்வோம்.
6. கல்வித் துறையில் தமிழ்க் கல்வியின் முக்கியத்துவம்.
7. தாய்த்தமிழின் தளமும் சிந்தனை ஆற்றலும்.
8. சமயச் சிந்தனை வளர்ச்சியில் தமிழ் மொழியின் பங்களிப்பு.
9. சித்த மருத்துவமும் தமிழின் முக்கியத்துவமும்.
10. குடும்ப மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்களிப்பு.
11. தமிழர்ப் பண்பாட்டு வளர்ச்சியில் தமிழ்.
(ஆகிய கருப்பொருள்களுக்கு ஏற்ப முதன்மை உரைகள் நிகழ்த்தப்படும்)

ஆய்வுப் பொருண்மை

கட்டுரைகள் தமிழில் அமைந்திருக்க வேண்டும். கட்டுரை 8-10 பக்கங்ளில் (A4) அளவில் இருக்க வேண்டும். 1.5 வரி இடைவெளியில் MS Unicode எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள 12 ஆய்வுப் பொருண்மைகளை அடிப்படையாகக்கொண்டு நீங்கள் விரும்பும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கலாம். மாநாட்டின் நோக்கத்தை அடையும் பொருட்டு, தங்களின் கட்டுரைகள் சமகால, எதிர்காலத் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு வழிகாட்டுபவையாக அமைவது சிறப்பு.

மாநாட்டுக்கான பதிவு

கட்டுரைக் குழுவின் ஒப்புதலுக்குப் பின்பு, மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல் இணைப்பைப் பயன்படுத்தி தங்களுடைய முழுமையான கட்டுரையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முழுமையான கட்டுரை கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15.11.2021

மாநாட்டு முதன்மை உரைகள்/அமர்வுகள் 24.11.2021-28.11.2021

பங்கேற்பாளர்கள்/ பார்வையாளர்களுக்கானப் பதிவு 1.11.2021 - 15.11.2021

தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் நூலாக வெளியிடப்படும்.

தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் படைப்பாளர்கள் மின்-ஆய்விதழ் காப்புரிமைக்கான படிவத்தை நிறைவு செய்ய வேண்டும்.

பங்கேற்கும் ஆய்வாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

அனைத்துப் படைப்புகளும் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவுக்கு உரிமையானவையாகும்.

Register for the event

தமிழியல் பன்னாட்டு மாநாடு 2021 செயலகம்

மலேசியத் தமிழர் சங்கம்

Malaysia Thamizhar Sangam
No. 544-2A, 1st Floor, Batu Complex,
3rd Mile, Ipoh Road, 51200 Kuala Lumpur, Malaysia
Tel: +603-6252 5254 / Fax: +603-6252 5281
Email: admin@malaysiathamizharsangam.org.my
Mobile: +6017-3756721 (Chairman)
+6011-3523 1429 (Secretary)

ஆய்வாளர்கள் பதிவுப் படிவம்
https:www.malaysiathamizharsangam.org.my/tpm21
Email /மின்னஞ்சல் :
tamilinternationalconference@gmail.com

Like & Follow us for Live Stream
Official Channel: MyThamizhar TV
Official Virtual Platform

தமிழியல் பன்னாட்டு மாநாடு 2021